தாய்லாந்தில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு, தீ விபத்து – 7 பேர் காயம்!

#world_news #Thailand #Oil #fire #Injury #Explosion
Mahathi
5 hours ago
தாய்லாந்தில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு, தீ விபத்து – 7 பேர் காயம்!

தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்கில் அமைந்துள்ள பாங்க்சாக் (Bangchak) எரிபொருள் சுத்திகரிப்பு மற்றும் களஞ்சியசாலையில் இன்று (26) பாரிய வெடிப்புடன் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த நிலையத்திற்கு அருகில் வசிக்கும் மக்களை உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்துவதற்காகத் தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புப் பணியாளர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்த விபத்தில் குறைந்தது 7 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தீயணைப்புப் படையினரின் தீவிர நடவடிக்கையைத் தொடர்ந்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த வெடிப்புக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!