பிரான்ஸில் கோர விபத்து – 18 வயதுடைய தமிழ் மாணவி உயிரிழப்பு!
பிரான்ஸில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் 18 வயதுடைய தமிழ் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த நவம்பர் 23ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில், தோழியுடன் மின்சார ஸ்கூட்டரில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த மாணவி, பாரவுந்து ஒன்றில் மோதுண்டு படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சிகிச்சைப் பிரிவினர் மாணவியின் உயிரைக் காப்பாற்றப் போராடிய போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவருடன் மின்சார ஸ்கூட்டரில் பயணித்த மற்றைய மாணவியும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
18 வயதில் எதிர்காலக் கனவுகளுடன் கல்விப் பயணத்தைத் தொடர்ந்த இளம் தமிழ் மாணவியின் திடீர் உயிரிழப்பு, குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பிரான்ஸில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.