போலி வங்கி இணையத்தளத்தை உருவாக்கி 10 இலட்சம் ரூபாய் மோசடி – சந்தேகநபர் கைது!

#SriLanka #ARREST #Police #Bank #LANKA4 #illegal
Mithra
22 minutes ago
போலி வங்கி இணையத்தளத்தை உருவாக்கி 10 இலட்சம் ரூபாய் மோசடி – சந்தேகநபர் கைது!

தனியார் வங்கியொன்றின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்று போலி இணையத்தளமொன்றை உருவாக்கி, 10 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த போலி இணையத்தளத்தின் ஊடாக நபரொருவரை ஏமாற்றி, அவரது வங்கிக் கணக்கிற்குள் பிரவேசிப்பதற்கான இரகசியத் தரவுகளைப் பெற்று, கணக்கிலிருந்த பணத்தை மோசடி செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வாரியபொல கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தனியார் நிறுவனமொன்றில் தரவு உள்ளீட்டு உத்தியோகத்தராகப் பணியாற்றும் சந்தேகநபர் நேற்று (26) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!