சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும், 6 ஆரோக்கியமான உணவுகள்,

Nila
3 years ago
சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும், 6 ஆரோக்கியமான உணவுகள்,

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் உணவு வகைகளில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். எந்த வகையான உணவுகளை சாப்பிட்டால் ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும் என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு அந்த வகை உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட 6 உணவு வகைகளை பற்றி பார்ப்போம்.

1. பீன்ஸ்

பீன்ஸ் வகைகள் குறைந்த கிளைசீமிக் குறியீடு கொண்டவை. இது ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. குறைந்த கிளைசிமிக் உணவான இதை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஒரு கப் வீதம் சாப்பிட்டு வருவது உங்களுடைய இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

2. ஆப்பிள்

ஆப்பிள் குறைந்த கிளைசீமிக் குறியீடு கொண்டது. இது உங்களுடைய இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. தினமும் ஒரு ஆப்பிளை நீங்கள் சாப்பிட்டு வந்தால் உங்களுடைய இரத்த சர்க்கரையின் அளவை திறமையாக நிர்வாகிக்கும் தன்மை கொண்டது ஆப்பிள். ஆப்பிளில் இருக்கக்கூடிய நார்ச்சத்து, வைட்டமின் சி உங்களை மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். உணவு இடைவெளியில் ஒரு ஆப்பிளை நீங்கள் சாப்பிட்டு வந்தால் உங்களுடைய ரத்த சர்க்கரையின் அளவு பிரச்சனை ஏற்படுத்தாத அளவில் இருக்கும்.

3. பாதாம்

பாதம் உங்களுடைய இரத்த சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. பாதாமில் மக்னீசியம் அதிகம் நிறைந்துள்ளது. இது உங்கள் உடலில் இன்சுலினை சரியாக செயல்படுத்த உதவும். இந்த பாதாம் போன்ற கொட்டைகள் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்டுள்ளது. இது இரத்தத்தில் இருக்கக்கூடிய குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க உதவும் சிறந்த வழிமுறை. தினசரி 30 கிராம் பாதாம் பருப்பு சாப்பிடுவது உங்களுடைய இரத்த சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்திருக்கும்

4. கீரை

எந்த வகை கீரையாக இருந்தாலும் உங்களுடைய இரத்த சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவும். சமைத்த கீரை வகைகளில் வெறும் 21 கலோரிகள் இருக்கும். கீரை வகைகளில் மெக்னீஷியம் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்து காணப்படுவதால் இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

5. சியா விதைகள்

உங்களுடைய ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது மட்டுமல்லாமல் உடல் எடை குறைப்பதற்கும் இந்த சியா விதைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சியா விதைகளில் நார்ச்சத்து அதிக அளவு இருப்பது மட்டுமல்லாமல் புரதமும் காணப்படுகிறது. தினசரி நம்முடைய உடலுக்கு தேவையான கால்சியம் அளவில் 18 சதவிகிதம் சியா விதையிலிருந்து கிடைக்கிறது.

6. மஞ்சள்

மஞ்சளில் குர்குமின் அதிக அளவில் உள்ளது. இது கணையத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைப்பதற்கு உதவுகிறது. தினசரி சமையலில் தேவையான அளவு மஞ்சள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!