வேப்பெண்ணெய்யின் பயன்பாடுகள் பற்றி தெரிந்துகொள்வோம்
Nila
3 years ago
எமது முன்னோர்கள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எடுத்துக்கொண்ட மூலிகை வேப்பெண்ணை என்பது இப்பொழுதும் அனைவராலும் ஆமோதிக்கின்ற விடயமாகும்.
இப்பொழுதும் பலர் வேப்பம் எண்ணையை அருந்திக்கொள்பவர்கள் உள்ளனர். அந்தவகையில் வேப்பெண்ணெய்யின் பயன்பாடுகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
- வேப்ப எண்ணெய் வேப்ப மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மகத்துவங்கள் நிறைந்த எண்ணெய்யாகும்.
- வேப்ப எண்ணெய்யை வாரத்திற்கு ஒரு முறை தோலில் நன்கு தடவிய பின்பு குளித்து வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.
- குளிர்ச்சியினால் வரும் தலைவலி, பிடரிவலிக்கு வாரம் ஒருமுறை வேப்ப எண்ணெய்யை தலையில் தேய்த்து நன்றாக ஊறிய பின் தலைக்கு குளித்து வந்தால் குணமாகும்.
- அன்றைய தினம் பகலில் தூங்கக்கூடாது.
- தினமும் வேப்ப எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் பேன் தொல்லை ஒழிவதுடன், முடிகொட்டுவது, முடிய வளர்ச்சிக்கும் உதவும். மூக்கடைப்பு ஏற்பட்டால் இரவில் தூங்குவது கஷ்டமாக இருக்கும் வேளைகளில் படுக்கச்செல்லும் முன் மூக்கின் துவாரத்தில் தடவினால் மூக்கடைப்பு சரியாகும்.
- வேப்ப எண்ணெய் மிகவும் சக்தி வாய்ந்த வேதிப்பொருட்களை தன்னுள்ளே கொண்டுள்ளது.
- இதை உடலுக்கு மேல் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான புற்று நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக குறைகிறது.
- வேப்ப எண்ணெய்யுடன் தூய தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்த்து கொண்டு உறங்குவதால், கொசுக்கடி மற்றும் பூச்சி கடிகளிலிருந்து இருந்து தப்பிக்கலாம்.
- சைனஸ் தொல்லை நீங்க தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் வேப்ப எண்ணெயின் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.