பண பிரச்சனை தீர பரிகாரம் இதோ றெடி.

Nila
4 years ago
பண பிரச்சனை தீர பரிகாரம் இதோ றெடி.

பலருக்கும் உள்ள முதல் பிரச்சனை என்னவென்றால் அது பண பிரச்சனை தான்.

ஏனெனில் நாம் எவ்வளவு தான் சம்பாதித்தாலும் கையில் பணம் தங்காது.

அதனால் இந்த செய்தி தொகுப்பில் பண பிரச்சனை தீர எளிய வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • சிறிய படிகாரம்
  • வசம்பு துண்டு
  • ஒரு சதுர வடிவில் பச்சை துணி
  • நூல்

பண பிரச்சனை தீர என்ன செய்ய வேண்டும்?

  • முதலில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி, அதன் பிறகு அங்கேயே பச்சை துணியை விரித்து அதில் படிகாரம் மற்றும் வசம்பு துண்டு ஆகியவற்றை வைத்து ஒரு நூலால் அந்த துணியை இறுக்கி கட்ட வேண்டும்.
  • கருப்பு நூலை தவிர வேறு எந்த நூலில் வேண்டுமானாலும் கட்டலாம்.
  • அதன் பிறகு பூஜை அறையில் இதை வைத்து குலந்தெய்வத்தை மனதில் நினைத்து வேண்டி கொண்டு, வீட்டின் வாசப்படியில் வெளிப்புறமாக அனைவரின் கண்ணிலும் படும்படி கட்ட வேண்டும்.
  • இதை அனைத்து நாட்களிலும் செய்யலாம்.
  • ஆனால் பிரம முகூர்த்தத்தில் மட்டும் தான் செய்ய வேண்டும்.
  • இவ்வாறு செய்தால் நம் வீட்டில் பண பிரச்சனை இருக்காது.
  • அதேபோல் வாரா கடன் கூட திரும்ப வரும்.
  • ஏனென்றால் இந்த துணியில் வைத்துள்ள படிகாரம், வீட்டில் உள்ள பணத்தில் இருக்கும் தேவையில்லாத தோஷம் அல்லது கண்திருஷ்டி ஆகியவற்றை வாசலிலேயே தடுத்து நிறுத்தி விடும்.
  • வசம்பில் வசீகர தன்மை இருப்பதால், உங்களிடம் இருந்து கடன் வாங்கியவர்கள் கூட அவர்களை ஏமாற்ற கூடாது என்று எண்ணி பணத்தை திருப்பி தந்து விடுவார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4