‘டொல்பின்’ சூறாவளி: சீனாவில் 10 இலட்சம் பேர் வெளியேற்றம்!

#China #Lanka4 #World #dolphin #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
‘டொல்பின்’ சூறாவளி: சீனாவில் 10 இலட்சம் பேர் வெளியேற்றம்!

மணிக்கு 162 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்றுடன் வீசிய ‘டொல்பின்’ சூறாவளி, கனமழையுடன் சீனாவின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கியுள்ளது.

1951ஆம் ஆண்டுக்குப் பின்னர் கிழக்கு சீனாவைத் தாக்கிய மிகப்பெரிய சூறாவளி இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் சுமார் 12 நாட்கள் வரை நீடிக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு சீனாவின் பல பகுதிகளில் 250 முதல் 500 மில்லிமீற்றர் வரை கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் சிறிய ஆறுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கும், மலைப்பகுதிகளில் மண்சரிவு அபாயமும் அதிகரித்துள்ளது.

சூறாவளியின் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க, கிழக்கு சீனா முழுவதும் 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். 

மேலும், பல துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, ‘டொல்பின்’ சூறாவளியின் தாக்கம் பிலிப்பைன்ஸிலும் ஏற்பட்டுள்ளது.

அங்கு பெய்துவரும் கனமழை மற்றும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 3 இலட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4