2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க ஐ.சி.சி. முயற்சி

Reha
3 years ago
2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க ஐ.சி.சி. முயற்சி

1900-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம் பெற்று இருந்தது. அதன் பிறகு கிரிக்கெட்டுக்கு ஒலிம்பிக்கில் இடம் கிடைக்கவில்லை. 34-வது ஒலிம்பிக் போட்டி லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் (அமெரிக்கா) 2028-ம் ஆண்டு நடைபெறுகிறது. லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் ஆட்டத்தை சேர்க்க வேண்டும் என்பதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக தனி கமிட்டி அமைத்து அதற்கான பணிகளை முடுக்கி விட்டு இருக்கிறது.

இது குறித்து ஐ.சி.சி.சேர்மன் கிரேக் பார்க்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்பதில் நாங்கள் எல்லோரும் ஒத்த கருத்துடன் இருக்கிறோம். உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேற்பட்ட கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களில் 90 சதவீதம் பேர் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை பார்க்க விரும்புகிறார்கள். 

அமெரிக்காவில் 3 கோடிக்கு மேல் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். லாஸ்ஏஞ்சல்ஸ் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டால் அவர்கள் தங்களது ஹீரோக்கள் ஒலிம்பிக் பதக்கத்துக்கான போட்டியில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்’ என்று தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெற்றால் அது 20 ஓவர் வடிவிலான போட்டியாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!