செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence, AI)“ வேலை இழப்பை உருவாக்குமா?

ஐர்லாங்கன்-நூர்ன்பெர்க் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பம் வேலை மற்றும் சமூகம் என்பவற்றில் கவனம் செலுத்தும் சமூகஅறிவியலாளரான "சபினே பைஃபர்" அவர்களின் ஆய்வுக்கருத்து:
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி, உலகம் முழுவதும் தொழிலாளர்கள் மத்தியில் எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்து புதிய கவலையை உருவாக்கியுள்ளது. அண்மைக்காலமாக தொழில் மற்றும் சமூக ஆய்வுகள் தெரிவிப்பதாவது:
மனித உடல் உழைப்பு மற்றும் மனிதத் தொடர்பு சார்ந்த வேலைகள் செயற்கை அறிவின் ஆற்றல் வசதிகளால் உடனடியாக மாற்றப்பட வாய்ப்பு குறைவாக இருக்கிறது. படைப்பாற்றல் மற்றும் அறிவாற்றல் சார்ந்த வேலைகள் குறிப்பாக குழுவாகச் செய்யப்படும் பணிகள் அதிக ஆபத்துக்குள்ளாகின்றன. "தொழில்பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் எதிர்காலத்தில் பாதுகாப்பாக இருப்பார்கள். ஆனால் உயர்கல்வி பெற்ற வேலைகளுக்கு (Academic jobs) முன் நிலையைப் போலவே பாதுகாப்பு இல்லை," என சோசியாலஜி பேராசிரியர் சபீனே ப்ஃபைபர் (Sabine Pfeiffer) தெரிவித்துள்ளார்.
செயற்கை அறிவுத் தொழில்நுட்பம் தற்போது மருத்துவத் துறையில் நுழைந்து, சில படங்களை (எம்.ஆர்.ஐ போன்றவை) நுட்பமாகப் பரிசோதிக்கலாம். ஒரு மருத்துவத்தாதி (நர்ஸ்) மாதிரி ஒருவர் செய்யும் கருணையோடு கூடிய செயல்களை அதேபோல செய்ய முடியாது.
இதனால், மனித அன்பு தேவைப்படும் வேலைகள் இன்னும் பாதுகாப்பாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். என்ன இருந்தாலும் சில தொழில்களில் மாற்றத்துக்கு முகம் கொடுக்க வேண்டிவரும். முக்கியமாக விளம்பர முகமைகள் மற்றும் படைப்பு தொழிலாளர்கள் செயற்கை அறிவால் சாவல்களை எதிர்கொள்வர்.
தற்போது விளம்பர தயாரிப்புகளில் பல்வேறு ஆட்கள் ஒவ்வொரு பகுதிகளாக வேலை செய்யும் சூழ்நிலை உள்ளது. ஆனால், செயற்கை அறிவு உடனடி வாசகங்கள், வடிவமைப்புகள், முறமைகளின் (மாடல்களின்) உருவாக்கம் ஆகியவற்றை ஒரே முறைபோல மேற்கொள்ள தொடங்கிவிட்டது. சில தொலைக்காட்சிகள் மனிதர்களைப் போல தோன்றும் செயற்கை முகங்களைப் பயன்படுத்தி முழுமையான விளம்பரங்கள் தயாரிக்க தொடங்கியுள்ளன.
மற்றொரு முக்கியமான தாக்கம், சமவொலி (டப்பிங்) தொழிலில் காணப்படுகிறது. இன்று வரை செயற்கை நுண்ணறிவு ஒரு குரலை நன்கு ஒத்ததாக உருவாக்கும் திறன் பெற்றுவிட்டது. எதிர்காலத்தில், நடிகர்களின் உதடுகளையும் அழுத்தமாக ஒத்துப்போகும் வகையில் மாற்றும் தொழில்நுட்பமும் வந்துவிடும். இதன் மூலம் மனித குரல்கொடுக்கும் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவாகி, பெரும்பாலான படங்கள் நேரடியாக கணினியின் வழியாக செயற்கை அறிவின் மென்பொருள் மொழிமாற்றம் செய்ய உள்ளது. இதனால் குரல்கொடுக்கும் கலைஞர்கள் தொழில் இழப்பார்கள்.
"நாம் இணையத்தில் பொருட்கள் வாங்குவது போலவே, செயற்கை அறிவு வழியிலும் உள்ளடக்கங்களை ஏற்க பழகிவிடுவோம். வியாபார உலகில் தொழில் இழப்பு பரிதாபத்திற்கு இடமில்லை" என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
அவசரமாகவே, பல தொழில்களில் மனிதரின் உணர்ச்சி, உடல் உழைப்பு, நேரடி தொடர்பு ஆகியவை தேவைப்படும் பணிகள் மட்டும் பாதுகாப்பில் உள்ளன. மற்றவர்களுக்கு தொழில்நுட்பத்தை சரியாகக் கையாளும் திறனை வளர்த்துக்கொள்வது அவசியமாகிறது.
தொகுப்பு: சிவமகிழி
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



