10 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த நபருக்கு கோவிட் தொற்று

Prathees
4 years ago
10 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த நபருக்கு கோவிட் தொற்று

அளுத்கம, சீனவத்த பகுதியில் வசிக்கும் சிறுமியை  பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டு பிரதேசத்தை விட்டு தப்பியோடிய சந்தேக நபர் நேற்று சட்டத்தரணி ஊடாக அளுத்கம பொலிஸில் சரணடைந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி 10 வயதானவர் எனவும் சந்தேக நபர் குறித்த சிறுமியின் தந்தையின் சித்தப்பா  (60 வயது) எனவும் பொலிஸார் குறப்பிட்டனர்.

சிறுமியை பரிசோதித்த தடயவியல் நிபுணர், கடந்த ஏப்ரல் மாதம் முதல் அலுத்கம கிராமத்தில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் பல தடவைகள்  சிறுமி ஏமாற்றப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட இரகசியத்தகவலின்  அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுமி பல தடவைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை தடயவியல் மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்திய பின்னர் களுத்துறை நாகொட மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.

சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் சென்ற போது  வீட்டில் இருக்காமல்  அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தப்பியோடிய சந்தேக நபர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோவிட் பரிசோதனை செய்தபோது  அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த சந்தேக நபர் சட்டத்தரணி  மூலம் நேற்று அளுத்கம பொலிசில் சரணடைந்துள்ளார்.

இதன் பின்னர் இராணுவத்தின் கீழ் தர்கா நகரில் செயல்படும் கோவிட் இடைநிலை சிகிச்சை மையத்தில் சந்தேக நபர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4