கட்டாயம் மீன் குழம்பு சமைத்து பாருங்கள்
Mugunthan Mugunthan
3 years ago
என்னென்ன தேவை?
- மீன் - 500 கிராம்
- தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன்
- கடுகு - 1 தேக்கரண்டி
- வெந்தயம் பொடி - 1/4 தேக்கரண்டி
- சாம்பார் வெங்காயம் - 20
- பூண்டு - 5
- கிராம்பு -சிறிதளவு
- இஞ்சி - 2 துண்டு
- பச்சை மிளகாய் - 2
- காஷ்மீரி மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
- கருப்பு மிளகு தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
- வெந்தயம்- ஒரு பெரிய சிட்டிகை
- உப்பு- தேவைக்கேற்ப
- புளி -சிறிதளவு
எப்படி செய்வது?
மீனை சுத்தம் செய்து வைக்கவும். புளியை கரைத்து தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும் காஷ்மீரி வத்தல் பொடி, மிளகு தூள், சேர்த்து நிறம் மாறும் வரை கிளறவும்.
பின்னர் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை கலந்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு மீனை சேர்த்து நன்றாக கலந்து மூடி வைத்து வேகவிடவும். மீன் வெந்ததும் மிளகு தூள், வெந்தயப்பொடி தூவி, அதனுடன் எண்ணெய் கலந்து 2 நிமிடம் கொதிக்கவிட்டால் எண்ணெய் தனியாக மிதக்க ஆரம்பிக்கும் போது கிளறி இறக்கிவிட்டால் கோட்டயம் ஸ்டைல் மீன் குழம்பு ரெடி..