பராசக்தி திரைப்படத்தை தடை செய்ய வேண்டுகோள் விடுப்பு

#TamilCinema #Ban #Movie #Politics #Sivakarthikeyan
Prasu
1 hour ago
பராசக்தி திரைப்படத்தை தடை செய்ய வேண்டுகோள் விடுப்பு

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள பராசக்தி படத்தை தடைசெய்ய வேண்டும் என தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில துணைத் தலைவர் அருண் பாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

1965ல அனைத்து மாநிலங்களிலும் அஞ்சல் அலுவலகப் படிவங்கள் இந்தியில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்று காங்கிரஸ் அரசாங்கம் ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 

இது எங்கள் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்குடன் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு முழுமையான புனைவு ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சந்திப்பது போன்றும், அதில் இந்திரா காந்தி வில்லத்தனமாகப் பேசுவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இது முழுவதும் ஒரு கற்பனை சித்தரிப்பு காட்சி. மறைந்த தேசியத் தலைவர்களை அவர்கள் வரலாற்றில் இடம்பெறாத நிகழ்வுகளில் சம்பந்தப்படுத்திச் சித்தரிப்பது சட்டத்திற்குப் புறம்பானது.

இந்த சித்தரிப்பை மேலும் வலுப்படுத்தி திரைப்படத்தில் இந்திரா காந்தி பிப்ரவரி 12, 1965 அன்று கோயம்புத்தூருக்கு வருகை தந்ததாக காட்டப்பட்டுள்ளது.

உண்மையில் அப்படி ஒரு வருகை நிகழவே இல்லை. பின்னர், அவர் முன்னிலையில் ஒரு ரயில் எரிக்கப்படுவது போன்ற காட்சிகளும், இந்தி திணிப்புக்கு எதிரான கையெழுத்துக்களை அவர் ஏற்றுக்கொண்டது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வுகள் எதுவும் வரலாற்றில் நடக்கவில்லை, இது மிகவும் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!