மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி சடலமாக மீட்பு

#SriLanka #Covid 19 #Death #Corona Virus
Yuga
4 years ago
மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி சடலமாக மீட்பு

மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி ஒருவர் வீதியோரத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

காலி – பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நபரே இவ்வாறு நேற்று முன்தினம் மாலை தப்பியோடியுள்ளார்.

பின்னர், சுகாதாரப் பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து குறித்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த நபர் மாதம்பே பிரதேசத்திலுள்ள ரயில் கடவைக்கு அருகில் வைத்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

     

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4