மெட்ராஸ் சிக்கன் 65 செய்யும் முறை
தேவையான பொருள்கள்:
1.மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
2. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
3.சிக்கன் 65 மசாலா – 1 ஸ்பூன்
4.கசூரி மேத்தி – 1 டேபிள் ஸ்பூன் (சேர்த்துக் கொண்டால் ரொம்பவே நல்லா இருக்கும்)
5. இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
6.தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
7.கான் பிளவர் மாவு – 1 டேபிள் ஸ்பூன்
8. மைதா – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருள்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து சுமார் 20 நிமிடங்களுக்கு நன்கு ஊற விடுங்கள்.
சிக்கன் 65 செய்யும் முறை:-முதலில் சிக்கனை கொஞ்சம் சாப்ட் ஆக்க ரெஸ்டாரண்ட் ஸ்டைலில், அதில் 1/2 கிலோ சிக்கனுக்கு 2 டேபிள் ஸ்பூன் வினீகர் சேர்த்து அதிகளவு உப்பை சேர்த்து தண்ணீர் ஊற்றி அரை மணி நேரத்துக்கு ஊற வைக்க வேண்டும் .
அரை மணி நேரம் கழித்து சிக்கனை தொட்டு பார்க்கும் பொழுது ரொம்பவே சாப்ட் ஆக இருக்கும்.
பிறகு 3 அல்லது 4 முறை நன்கு சிக்கனை கழுவிக்கொள்ள வேண்டும் . ஏனென்றால் நாம் அதிகமான உப்பு சேர்த்து உள்ளோம் என்பதால் தான் .
இதனை ரெடி செய்ததும், இப்போது 20 நிமிடம் ஊற வைத்த சிக்கனை ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொஞ்சம் கொஞ்சமாக சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும். தயார் செய்த சிக்கன் 65 யை தனியாக வைத்து விடுங்கள்
1.தக்காளி சாஸ் – 3 டேபிள் ஸ்பூன்
2.தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
3.பீட்ரூட் ஜூஸ் – 2 டேபிள் ஸ்பூன்(for natural food color purpose)
மேலே கூறிய அனைத்தையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து தனியே வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது நாம் ஏற்கனவே ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் தயார் செய்து வைத்துள்ள அனைத்தையும் மீண்டும் ஒரு கடாயில் வைத்து சிறிது கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது வதங்கியதும் அதனுடன் நாம் செய்து வைத்த சிக்கன் 65-யையும் சேர்த்து நன்கு வதக்குங்கள்.
அவ்ளோ தான் இப்போது சுவையான மொறு மொறுவென ரொம்பவே டேஸ்டியான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65(chicken 65 recipe) ரெசிபி ரெடி…!