நாவில் பார்த்தவுடனே எச்சில் ஊறும் 'சிக்கன் 555' : செய்வது எப்படி?
Mugunthan Mugunthan
3 years ago
தேவையான பொருட்கள் :
- சிக்கன் - 250 கிராம்
- மிளகாய் தூள் - 1 tbsp
- மஞ்சள் பொடி - 1 tsp
- கரம் மசாலா - 1 tsp
- உப்பு - தேவையான அளவு
- அரிசி மாவு - 1 tsp
- ரவை - 1 tbsp
- எண்ணெய் - 2 tbsp
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
- சிக்கனை சின்ன சின்ன பீஸாக நறுக்கி சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
- அதை ஒரு கிண்ணத்தில் போட்டு மிளகாய் தூள், கரம் மசாலா, அரிசி மாவு, மஞ்சள், உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடங்களுக்கு ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள்.
- 30 நிமிடங்கள் ஊறியதும் தோசைக் கல் வைத்து எண்ணெய் ஊற்றி ஒவ்வொரு பீஸாக அதன் மீது வைக்கவும்.
- அவை பொன்னிறமாகவும், மொறுமொறுவெனவும் வறுபட்டதும் எடுத்துவிட்டு மீதமுள்ள சிக்கனை வையுங்கள்.
- இப்படி செய்ததும் இறுதியாக கறிவேப்பிலையை எண்ணெயில் பொறிக்கச் செய்து வறுத்த கறியில் போடவும்.
- அவ்வளவுதான் மொறுமொறுவென 555 சிக்கன் தயார்.