வெஜிடபிள் குருமா வைத்து பாருங்க

வெஜிடபிள் குருமா வைத்து பாருங்க

முதலில் இந்த குருவுக்குத் தேவையான மசாலாவை அரைத்துக் கொள்வோம்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள்.

அந்த கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கிராம்பு – 2, ஏலக்காய் – 2, பட்டை – 1, அன்னாசிப்பூ – 1, சீரகம் – 1 ஸ்பூன், சோம்பு – 1 ஸ்பூன், மிளகு – 5, கசகசா – 1 ஸ்பூன், வரமிளகாய் – 3 அல்லது 4, மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் நறுக்கியது – 1, மீடியம் சைஸ் தக்காளி நறுக்கியது – 1, புதினா – 2 இனுக்கு, பொட்டுக்கடலை – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கி, இறுதியாக 1 கப் தேங்காய் துருவலை சேர்த்து அடுப்பை அணைத்துவிட வேண்டும்

 இந்த கலவையை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி விழுது போல அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக குருமாவுக்குத் தேவையான உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவர் இப்படி உங்களுக்கு தேவையான காய்கறிகளை நறுக்கி சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்தபடியாக ஒரு குக்கரை அடுப்பில் வைத்து கொள்ள வேண்டும்.

அதில் எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன் அளவு ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பிரியாணி இலை – 1, சோம்பு – 1/2 ஸ்பூன், நீள்வாக்கில் வெட்டிய மீடியம் சைஸ் வெங்காயம் – 1 சேர்த்து, வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவேண்டும்.

வெங்காயம் வதங்கியவுடன் மீடியம் சைஸ் தக்காளி பழம் – 1 வெட்டி போட்டு, கூடவே இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் போட்டு தக்காளியை பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

அதன்பின்பு தயாராக வெட்டி வைத்திருக்கும் காய்கறிகளை சேர்த்து ஒருமுறை எண்ணெயில் வதக்கி விட்டு, அரைத்து வைத்திருக்கும் விழுதை குக்கரில் சேர்த்து, தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்றாக கலந்து விட்டு ஒரு கொதி வந்தவுடன் குக்கரை மூடி மிதமான தீயில் 2 விசில் விட்டால் போதும்.

கமகம வாசத்தோடு ஒரு வெஜிடபிள் குருமா தயாராக இருக்கும். குருமாவில் மேல் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைத் தூவி விடுங்கள்.

இந்த வெஜிடபிள் குருமாவை இட்லி தோசை சப்பாத்தி பூரி வெள்ளை சாதத்துடன் கூட சேர்த்து பரிமாறலாம்.

குருமாவில் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்து செய்வது ஒருவிதம் என்றால், இதில் நாம் எல்லா பொருட்களையும் அரைத்து ஊற்றி வைத்து இருக்கின்றோம். இதன் சுவை கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும்.

ட்ரை பண்ணி பாருங்க.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!