இறால் டெவில்! செய்து உருசித்துப்பாருங்கள்!!

இறால் டெவில்! செய்து உருசித்துப்பாருங்கள்!!

தேவையானதபொருட்கள்:

  • 500 கிராம் இறால்
  • 50 மில்லிலீட்டர் எண்ணெய்
  • 3 கறிமிளகாய்
  • 3 பச்சைமிளகாய்
  • குடை மிளகாய் (1/2 பச்சை, 1/2சிவப்பு மற்றும் 1/2ஆரஞ்சு மிளகாய்  )
  • 2 வெங்காயம் 
  • 5 பல் பூண்டு 
  • 1” இஞ்சி 
  • 1 மே.க சில்லி பேஸ்ட் / 1 மே.க  வெட்டுத்தூள்
  • 1 தக்காளி / 2 மே.க தக்காளி சோஸ் 
  • 1 தே.க எலுமிச்சை சாறு
  • 1/2 தே.க வினிகர்
  • 1/2 மே.க சோயா சோஸ்
  • உப்பு
  • சீனி  
  • மிளகுதூள்

செய்முறை:

  1. இறாலை கோது, வயிற்றுப்பகுதி (குடல்) ஆகியவற்றை அகற்றி துப்பரவாக்கி எடுக்கவும்.
  2. வெங்காயம் மற்றும் குடை மிளகாய்களை 1 இஞ் சதுரதுண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். கறிமிளகாயை நீள்வட்டமாக வெட்டிக்கொள்ளவும்.
  3. பச்சைமிளகாயை நடுவில் கீறிக்கொள்ளவும்.
  4. இஞ்சி, உள்ளி மற்றும் தக்காளி ஆகியவற்றை சிறு சிறு  துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும் (தக்காளியை மசித்து அல்லது மக்சியில் அடித்தும் விடலாம்).
  5. ஒரு பாத்திரத்தில் எண்ணையை விட்டு, மிதமான வெப்பத்தில் சூடேறியதும், வெட்டிய இஞ்சி,  உள்ளி, இறால் மற்றும் உப்பு போட்டு, இறால் கலர் மாறும் வரை வதக்கவும்.
  6. வெங்காயம், குடை மிளகாய் மற்றும் கறிமிளகாய் போட்டு கிண்டி 3 நிமிடங்கள் வதங்க விடவும்.
  7. தக்காளியை போட்டு 3 நிமிடங்கள் வதங்க விடவும்.
  8. அடுத்ததாக பச்சைமிளகாய் போட்டு 1 நிமிடம் வதங்க விடவும்.
  9. இறுதியாக சில்லி பேஸ்ட் /  வெட்டுத்தூள், தக்காளி சோஸ், எலுமிச்சை சாறு, வினிகர் மற்றும் சோயா சோஸ் ஆகியவற்றை போட்டு கிண்டி, உங்கள் சுவைக்கேற்ப்ப உப்பு, சீனி, மிளகுதூள் சேர்த்து ஒரு சில நிமிடங்கள் வதங்க விடவும். 
  10. இறால் டெவில் தயார்!

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!