‘அரிசி பருப்பு ரைஸ்’ செய்வது எப்படி?
Mugunthan Mugunthan
3 years ago

தேவையான பொருட்கள்:
- அரிசி – ஒரு டம்ளர்,
- துவரம் பருப்பு – கால் டம்ளர்,
- பெரிய வெங்காயம் – 1,
- தக்காளி – 2,
- பச்சை மிளகாய் – 3,
- காய்ந்த மிளகாய் – 3,
- பூண்டு – மூன்று பல்,
தாளிக்க:
- கடுகு – ஒரு டீஸ்பூன்,
- சீரகம் – ஒரு டீஸ்பூன்,
- மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
- கறிவேப்பிலை – ஒரு கொத்து,
- மல்லி தழை – சிறிதளவு,
- உப்பு – தேவையான அளவிற்கு,
- எண்ணெய் அல்லது நெய் – தேவைக்கேற்ப.
செய்முறை விளக்கம்:
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
- தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
- பின்னர் அரிசி மற்றும் பருப்பு வகைகளை களைந்து சுத்தம் செய்து ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
- பின் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு தாளிக்க வேண்டும். தாளித்து முடித்த பின்பு பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
- வெங்காயம் வதங்கி வரும் பொழுது பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி, பூண்டு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை அப்படியே சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- இவைகள் நன்கு மசித்து வதங்கி வந்ததும், தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒருமுறை வதக்கிக் கொள்ளுங்கள்.
- பின்னர் ஊற வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பு வகைகளை தண்ணீர் நீக்கி சுத்தமாக வடித்துவிட்டு பின்னர் இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- பின்னர் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி போட்டு மூடி விடுங்கள்.
- ஒரு ஆழாக்கு சாதாரண சாப்பாட்டு அரிசிக்கு பொதுவாக இரண்டு ஆழாக்கு அளவிற்கு தண்ணீர் ஊற்றினால் சரியாக இருக்கும்.
- அவரவர்களின் அரிசிக்கு ஏற்ப தண்ணீரின் அளவை மாற்றி சேர்த்துக் கொள்வது நல்லது.
- குக்கர் 3 விசில் விட்டதும் அடுப்பை அணைத்து விடுங்கள்.
- பிரஷர் முழுவதுமாக அடங்கும் வரை குக்கரை திறந்து பார்க்க வேண்டாம்.
- பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து கொத்தமல்லி தழைகளைத் தூவி கிளறி சூடாக பரிமாற வேண்டியது தான்.
- இந்த சாம்பார் செய்ய எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்தால் இன்னும் கூடுதல் சுவை தரும்.
- காலை வேளையில் அவசரமான சமயங்களில் இந்த சாம்பார் சாதத்தை பத்தே நிமிடத்தில் செய்து கொடுத்து வீட்டில் இருப்பவர்களை அனுப்பி விடலாம். கோவையின் பாரம்பரிய உணவை நீங்களும் ஒருமுறை இப்படி சமைத்து பார்த்து அசத்துங்கள்.



