சூப்பரான சேமியா பிரியாணி சமையுங்கள்

சூப்பரான சேமியா பிரியாணி சமையுங்கள்

தேவையான பொருட்கள்:

  • சேமியா – அரை கிலோ,
  • பெரிய வெங்காயம் – கால் கிலோ,
  • தக்காளி – 2,
  • பச்சை மிளகாய் – 3,
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்,
  • மிளகாய்தூள் – ஒன்றரை ஸ்பூன்,
  • மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்,
  • உப்பு – ஒரு ஸ்பூன்,
  • புதினா – ஒரு கொத்து,
  • கொத்தமல்லி – ஒரு கொத்து,
  • எண்ணெய் – 4 ஸ்பூன்,
  • பிரிஞ்சி இலை – ஒன்று,
  • பட்டை – சிறிய துண்டு,
  • ஏலக்காய் – 2,
  • கிராம்பு – 2,
  • அன்னாசிப்பூ – ஒன்று,
  • ஜாதிபத்ரி – 1,
  • சோம்பு – ஒரு ஸ்பூன்.

செய்முறை:

  • முதலில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை கிள்ளி கொண்டு நன்றாக நீரில் அலசி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதன் பின் ஒரு கடாயில் சேமியாவை லேசாக வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பிரிஞ்சி இலை, சோம்பு, பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ மற்றும் ஜாதிபத்ரி இவை அனைத்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • வெங்காயம் நன்றாக குழைந்து வருமாறு வதக்கிய பின்னர் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • அதன் பின் தக்காளி புதினா கொத்தமல்லி போன்றவற்றை இவற்றுடன் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
  • தண்ணீர் நன்றாக கொதித்த பின்னர் வறுத்து வைத்துள்ள சேமியாவை இதனுடன் சேர்த்து 5 நிமிடங்கள் கடாயை மூடி வைத்து அடுப்பை சிறிய தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
  • 5 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து ஒரு முறை கிளறி விட வேண்டும். அவ்வளவு தான்.
  • சுவையான சேமியா பிரியாணி தயாராகி விட்டது. இவ்வாறு சேமியா வைத்து ஒருமுறை பிரியாணி செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்கள். மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். பிரியாணி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தவர்களுக்கும் இதை சாப்பிட்டவுடன் மனது நிறைவாகி விடும்.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!