வெண்டிக்காய் ரைஸ் சமையுங்கள்

வெண்டிக்காய் ரைஸ் சமையுங்கள்

தேவையான பொருட்கள் :

  • உதிரியாக வடித்த ரைஸ் - 1 1/2 கப்
  • வெண்டைக்காய் - 100 கிராம்
  • சின்ன வெங்காயம் - 50 கிராம்
  • கெட்டியான புளிக்கரைசல் - 1 டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
  • கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
  • முந்திரி பருப்பு - 10
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • எண்ணெய் - 1 டீஸ்பூன்
  • உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை :

  • வெங்காயம், வெண்டைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் வெண்டைக்காய், உப்பு சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் வதக்கவும்.
  • அடுத்து அதில் மஞ்சள்தூள், கறிவேப்பிலை, பட்டை பொடி, மிளகுத்தூள், உப்பு, கெட்டியான புளிக்கரைசல் சேர்த்து வெண்டைக்காயை நன்றாக கிளறி விட்டு வேக வைக்கவும்.
  • மற்றொரு கடாயை எடுத்து 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, முந்திரி இட்டு பொரிந்ததும் அதில் வெண்டைக்காயை கலவையைச் சேர்க்கவும்.
  • அதனுடன், வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • குறைவான தீயில் 5 நிமிடங்கள் கிளறி விட்டு உப்பு சரிபார்த்து அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.
  • சூப்பரான வெண்டைக்காய் சாதம் ரெடி!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!