60 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்த நியூசிலாந்து அணி!
இன்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இன்றைய இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெறும் 60 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமாக தோல்வி அடைந்துள்ளது.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் டி-20 ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய நியுசுலந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவிந்திரா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களும் வங்கதேசத்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆக்கினார்.
18 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த நியூசிலாந்து அணி, 10 ஓவர்கள் வரை மேலும் விக்கெட்டுகளை இழக்காமல் 40 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து 20 ரன்கள் சேர்க்கும் முன்னாள் அனைத்து விக்கெட்களையும் இழந்து 60 ரன்கள் மட்டுமே எடுத்து.
இதனையடுத்து 61 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்க தேச அணி, 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. முஷ்பிஃகுர் ரஹிம் 16, மஹ்முதுல்லா 14 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.