இலங்கை முதலாவது ஒருநாள் போட்டியில் 14 ஓட்டங்களால் வெற்றி!

இலங்கை முதலாவது ஒருநாள் போட்டியில் 14 ஓட்டங்களால் வெற்றி!

தென்ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.


அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 118 ரன்னில் அவுட்டானார்.  சரித் அசலங்கா 72 ரன்னில் ஆட்டமிழந்தார். தனஞ்செய டி சில்வா 44 ரன்னில் வெளியேறினார்.

தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபடா, மகராஜ் தலா 2 விக்கெட், ஷம்சி ஒரு விக்கெட் வீழ்த்தினர்,

இதையடுத்து, 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மார்க்ராம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 96 ரன்னில் ஆட்டமிழந்தார். வான் டெர் டுசன் 59 ரன்னில் அவுட்டானார். பவுமா 38 ரன்னிலும், கிளாசன் 36 ரன்னிலும் வெளியேறினர்.

இறுதியில், தென்ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பில் அகிலா தனஞ்செய 2 விக்கெட்டும், கருணரத்னே, ஹசரங்கா, ஜெயவிக்ரமா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகன் விருது அவிஷ்கா பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!