IPL2021-வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை அணியில் சேர்த்துக்கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ்

Prasu
3 years ago
IPL2021-வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை அணியில் சேர்த்துக்கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் தற்காலிகமாக ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டது. எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளன.

அதற்காக, ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்த ஐபிஎல் அணிகள் அங்கு தீவிரமாக தயாராகிவருகின்றன. வெளிநாட்டு வீரர்கள் சிலர் ஆடாததால், ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் அந்த அணிகளுக்கு கடும் சவாலாக இருக்கும். வெளிநாட்டு வீரர்கள் விலகியதால் கடும் பாதிப்பை சந்தித்திருப்பது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய 3 இங்கிலாந்து வீரர்களையே அதிகமாக சார்ந்திருந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், பட்லர் ஆகிய மூவருமே ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகினர்.

அந்த இழப்புகளை ஈடுகட்ட புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்துவருகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு மாற்று வீரராக நியூசிலாந்து விகீப்பர் - பேட்ஸ்மேனான க்ளென் ஃபிலிப்ஸை ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அவரை தொடர்ந்து, உலகின் நம்பர் 1 டி20 பவுலரான தென்னாப்பிரிக்க ஸ்பின்னர் ஷாம்ஸியை ஒப்பந்தம் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 

இந்நிலையில், ஜோஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவருக்கும் மாற்று வீரர்களாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான எவின் லூயிஸ் மற்றும் ஒஷேன் தாமஸ் ஆகிய இருவரையும் ஒப்பந்தம் செய்துள்ளது  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

2018 மற்றும் 2019 ஐபிஎல் சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த எவின் லூயிஸ் 2020 சீசனில் ஆடவில்லை. 2019ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்று ஆடிய ஒஷேன் தாமஸும் கடந்த சீசனில் ஆடவில்லை. இந்நிலையில், அவர்கள் இருவரையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!