முட்டை பிரட் பீசா ஒருமுறை நீங்களும் வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள்...(வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)

முட்டை பிரட் பீசா ஒருமுறை நீங்களும் வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள்...(வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)

தேவையான பொருட்கள்:

  • பிரட் – 6,
  • முட்டை – 4,
  • சீஸ் பார் – 4,
  • தக்காளி சாஸ் – 3 ஸ்பூன்,
  • உப்பு – அரை ஸ்பூன்.

செய்முறை:

  1. முதலில் 6 பிரட்டை எடுத்துக் கொண்டு அதனை சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
  2. பின்னர் ஒரு கிண்ணத்தில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
  3. பிறகு சீஸ் பார்களை தேங்காய் சீவில் பயன்படுத்தி நன்றாக துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
  4.  அதன் பின்னர் கலந்து வைத்துள்ள முட்டையுடன் நறுக்கி வைத்துள்ள பிரட் துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  5. சிறிது நேரம் பிரட்டை முட்டையில் நன்றாக ஊறிவிடும்.
  6. அதன்பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பின் மீது வைத்து முட்டையுடன் கலந்து வைத்துள்ள பிரட்டை ஆம்லெட் போன்று தோசைக்கல்லில் ஊற்ற வேண்டும். பிரெட் துண்டுகள் மேலே எழும்பி உப்பலாக இருந்தால் அவற்றை சற்று தட்டையாக இருக்குமாறு ஒரு ஸ்பூன் வைத்து சரி செய்ய வேண்டும்.
  7. அடுப்பை சிறிய தீயில் வைத்து 5 நிமிடங்கள் வேகவைத்து, அதன் பின்னர் திருப்பி போட வேண்டும்.
  8. திருப்பி போட்ட உடன் அதன் மேற்புறத்தில் மூன்று ஸ்பூன் தக்காளி சாஸை நன்றாக பரவலாகத் தடவி விட வேண்டும்.
  9. அதன் பிறகு துருவிய சீஸை இதன் மீது அனைத்து இடங்களிலும் விழுமாறு தூவி விட வேண்டும். 5 நிமிடம் தோசைக்கல்லில் இதனை அப்படியே வைத்து விட்டு அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

குறிப்பு:

இதன் மீது சிறிதளவு வேக வைத்த கேரட், பீன்ஸ், குடைமிளகாய் போன்ற காய்கறிகளையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது தயாராக இருக்கும் பீட்சாவை தேவைக்கேற்ற வடிவங்களில் வெட்டி எடுத்து பரிமாறி சாப்பிட கொடுக்கலாம். இதில் பேர்த்துள்ள சீஸ்கள் நன்றாக உருகி மிகவும் சுவையாக இருக்கும். ஒருமுறை இந்த பீட்சாவை சுவைத்த குழந்தைகள் மீண்டும் இதனை எப்போது சமைப்பீர்கள் என்று உங்களைத் தொல்லை செய்யவே ஆரம்பித்து விடுவார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!