சுவையான ஆட்டு நுரையீரல் வறுவல் - செய்வது எப்படி...?

சுவையான ஆட்டு நுரையீரல் வறுவல் - செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்: ஒரு ஆட்டின் நுரையீரல்

  • பெரிய வெங்காயம் – 2,
  • பச்சை மிளகாய் – 2,
  • மிளகு – ஒரு ஸ்பூன்,
  • சீரகம் – ஒரு ஸ்பூன்,
  • மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன்,
  • தனியா தூள் – ஒரு ஸ்பூன்,
  • உப்பு – ஒரு ஸ்பூன்,
  • நல்லெண்ணெய் – 5 ஸ்பூன்,
  • மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்,
  • இஞ்சி பூண்டு விழுது – ஒன்றரை ஸ்பூன்,
  • கருவேப்பிலை – ஒரு கொத்து,
  • கொத்தமல்லி – ஒரு கொத்து.

 செய்முறை:

  1. முதலில் ஆட்டின் நுரையீரலை பக்குவமாக சுத்தம் செய்து இரண்டு மூன்று முறை நன்றாக தண்ணீர் மாற்றி அலசி, பின்னர் அவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
     
  2. அதன்பின் இரண்டு பெரிய வெங்காயத்தினை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
     
  3. அதேபோல் இரண்டு பச்சை மிளகாயையும் சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

மசாலா:

  1. ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஏதும் சேர்க்காமல் ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் இவை இரண்டையும் நன்றாக பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
     
  2. பின்னர் இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து அதனையும் நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
     
  3. வறுத்த மிளகு, சீரகத்தை நன்றாக ஆறவைத்து பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
     
  4. அதன் பின் ஒரு குக்கரை அடுப்பின் மீது வைத்து ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் நன்றாக காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் கறிவேப்பிலை இவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
     
  5. பிறகு அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள் இவற்றை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும்.
     
  6. பின்னர் இவற்றுடன் சுத்தம் செய்து வைத்துள்ள ஆட்டின் நுரையீரலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
     
  7. நுரையீரல் நன்றாக வதங்கியதும் தேவையான உப்பு மற்றும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அதனுடன் 1 1/2 ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
     
  8. இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை சென்றதும் அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து, குக்கரை மூடி 6 விசில் வரும்வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
     
  9. பின்னர் குக்கரில் பிரஷர் குறைந்ததும் குக்கரை திறந்து நன்றாக கிளறி விட்டு சிறிது நேரம் அவற்றில் இருக்கும் நீர் சுண்டி வரும் வரை வேக வைக்க வேண்டும்.
     
  10. அதன் பின் இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பை அணைத்து விட வேண்டும்.
     
  11. ஒருமுறை இவ்வாறு சுவையான ஆட்டு நுரையீரல் வறுவல் செய்து பாருங்கள்.

நீங்கள் எவ்வளவு சாதம் செய்தாலும் அதில் ஒருபிடி சாதமும் மிஞ்சாது. நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள், ஆஸ்துமா, நுரையீரலில் சளி போன்ற பிரச்சனை உள்ளவர்களும் இதனை சமைத்து சாப்பிட அவற்றிற்கு நல்ல தீர்வாக அமையும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!