அமீரக நிலவு பயண திட்டம்: ‘ராஷித் ரோவரை’ அடுத்த ஆண்டுக்குள் விண்ணில் ஏவ திட்டம்

Keerthi
4 years ago
அமீரக நிலவு பயண திட்டம்: ‘ராஷித் ரோவரை’ அடுத்த ஆண்டுக்குள் விண்ணில் ஏவ திட்டம்

இது குறித்து நிலவு பயண திட்ட மேலாளர் டாக்டர் ஹமத் அல் மர்சூகி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
லேக் ஆப் டிரீம்ஸ்
அமீரகத்தின் சார்பில் துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தில் நிலவில் சென்று ஆராய்ச்சி செய்யும் ராஷித் ரோவர் வாகனம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த வாகனம் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் வரும் ஆண்டில் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் நிலவில் தரையிறங்கும் முதற்கட்ட பகுதியானது தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள நிலவின் நிலப்பரப்புக்கு லத்தீன் மொழியில் ‘லாகஸ் சோம்னியோரம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது லேக் ஆப் டிரீம்ஸ் என்ற ஆங்கில பெயரால் அழைக்கப்படுகிறது. இது நிலவின் முன் பகுதியில் அமைந்துள்ள இடமாகும். கரடு முரடாக இல்லாமல் இருப்பதன் காரணமாக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த பகுதியில் தரையிறங்க முடியாவிட்டால் மாற்று ஏற்பாடாக இன்னும் 3 இடங்கள் தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளது.

3 மாதங்கள் விண்ணில் பயணம்
தற்போது மாதிரி ராஷித் ரோவர் வாகனத்தின் செயல்பாடுகளின் சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஜப்பான் நாட்டின் ஐ ஸ்பேஸ் நிறுவனம் சார்பில் ‘ஹக்குட்டோ- ஆர்’ என்ற லேண்டர் வாகனம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த லேண்டர் வாகனம்தான் ராஷித் ரோவரை சுமந்து சென்று தரையிறக்குகிறது. அடுத்த ஆண்டில் (2022) ஆகஸ்டு மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ்- பால்கன் 9 என்ற ராக்கெட் மூலம் ரோஷித் ரோவர் லேண்டர் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது. இதில் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் ராஷித் ரோவர் 3 மாதங்கள் விண்ணில் பயணம் செய்து நிலவை அடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4