கஞ்சாவுடன் 16 வயது பாடசாலை மாணவன் கைது!

#SriLanka #Arrest #Lanka4 #School Student #Cannabis #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
கஞ்சாவுடன் 16 வயது பாடசாலை மாணவன் கைது!

பதுளை – லுணுகலை பகுதியில் 5,600 மில்லிகிராம் கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் லுணுகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

லுணுகலை – 27 கட்டை, அலகொலகம பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவர், லுணுகலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியொன்றிலிருந்து இறங்கி லுணுகலை பாக்குத் தோட்டம் பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மாணவர் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, பொலிஸார் அவரைச் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, மாணவரிடமிருந்து 5,600 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட மாணவரின் தந்தை கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்டு, ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மாணவரை இன்று (13) பசறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4