அவசரகால சட்டம் குறித்து இன்று பாராளுமன்றில் விவாதம் 

#Parliament #SriLanka
Prathees
4 years ago
அவசரகால சட்டம் குறித்து இன்று பாராளுமன்றில் விவாதம் 

அவசரகால சட்டம் குறித்து பாராளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படவுள்ளது. 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனா தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஓகஸ்ட் 30ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விதிக்கப்பட்ட அவசரகால ட்டம் குறித்து  இன்று பகல் 1.30 விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

அத்தியாவசிய பொருள்களை விநியோகம் செய்வதற்காக அவசர கால சட்டம்  நாடளாவிய ரீதியில்  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்பதுடன் அந்த விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியிருந்தது.

இந்நிலையில். இன்றையதினம் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்டிருந்த வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு பிறிதொரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற தொடர்பாடல் அலுவலகம் அறிவித்துள்ளது.

கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் இந்த வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4