மட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் மீட்பு

#Batticaloa #Death #Police
Prathees
4 years ago
மட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப் பிரிவுக்குட்பட்ட நல்லையா வீதியில் அமைந்துள்ள  வீடு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

செல்வரெட்னம் குலேந்திரன் என்னும் 73 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள மதுபான விற்பனை நிலையத்தில் கணக்காளராக கடமையாற்றி வருவதாகவும் ஊரடங்கு காரணமாக தொழிலுக்கு செல்லாமல்  வீட்டில் இருந்து வந்த நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திடீர் மரண விசாரணை அதிகாரி ஜீவரெட்னம் குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4