கனடா ரொரன்ரோ சட்ட நிறுவனத்தில் வேலையின் போது பெண் கையால் குத்தப்பட்டு மரணம்!

#world_news
கனடா ரொரன்ரோ சட்ட நிறுவனத்தில் வேலையின் போது பெண் கையால் குத்தப்பட்டு மரணம்!

ஜுலியா பெர்குசன் அழகுக்கலை தொழிலில் திறமைவாய்ந்தவராயினும் இவருக்கு தொழிலில் மாற்றம் தேவைப்பட்டது. இலண்டனில் இருந்து கனடா ரொரன்ரோவிற்கு வேலையின் நிமித்தம் குடிபெயர்ந்து வந்துள்ளார்.

சில வருடங்களின் முன்பு தான் இவர் ரொரன்ரோவில் வரவேற்பாளராக ஹிக் அடம்ஸ் சட்ட நிறுவனத்தில் சேர்ந்துகொண்டார். இந்த நிறுவனம் ரொரன்ரோவில் மிகப் பெரியதும் புகழ்வாய்ந்ததுமான ஒரு குற்றிவியல் சட்ட நிறுவனமாகும்.

இங்கு பல டசின் கணக்கில் சட்டத்தரணிகள் தொழில் புரிந்து வந்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை  பிற்பகல் 2மணிக்கு 238 King St. E., east of Sherbourne Street இல் அமைந்துள்ள அலுவலகத்திற்கு   ஒரு ஆண் இந்த நிறுவனத்திற்கு வந்து  இந்த இளம் பெண் மார்பில்  குத்தியுள்ளார். அவர் உடனடியாக அருகில் உள்ள சென் மைக்கல் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

எனினும் காயங்கள் காரணமாக இவர் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயரிழந்தார். இவருக்கு வயது 29. குற்றவாளி கைது செய்யப்பட்டு விட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4