உக்ரைனில் அதிகமாகும் கொரோனா பாதிப்பு 2,197 பேருக்கு உறுதி

#Covid 19
Prasu
4 years ago
உக்ரைனில் அதிகமாகும் கொரோனா பாதிப்பு 2,197  பேருக்கு உறுதி

உக்ரைனில் கொரோனவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 2,197 பேருக்கு கொரோனா    தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23,00,504-ஆக உயா்ந்துள்ளது.

இது தவிர, மேலும் 53 பேர் கொரோனா  பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். அதையடுத்து, நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 54,054-ஆக உயா்ந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

உக்ரைனில் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்த 22,14,606 பேர் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 31,844 பேர் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 177 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4