வரி விதிப்பு: அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வாதாரத்திலும் பாரிய தாக்கம் ஏற்படும்!

#SriLanka #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
வரி விதிப்பு: அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வாதாரத்திலும் பாரிய தாக்கம் ஏற்படும்!

கடன்ப அட்டைகளுக்கான (Credit Cards) வருடாந்தக் கட்டணங்கள், வங்கி ஆவணக் கோரிக்கை கட்டணங்கள் (Statement fees), காசோலைப்புத்தகக் கட்டணங்கள் மற்றும் ஏனைய நிர்வாகக் கட்டணங்களுடன் இந்த வரி நேரடியாக இணைக்கப்படும்.

இதனால் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தும் சாதாரண நுகர்வோரின் செலவினங்கள் அதிகரிக்கும். ஆலோசகர்கள், நடன/சங்கீத ஆசிரியர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் (Event Planners) மற்றும் சுதந்திரக் கலைஞர்கள் (Freelancers) போன்றோர் ஒரு நிறுவனத்திற்குச் சேவை வழங்கி, அதற்கான கொடுப்பனவைப் பெறும்போது, மூலத்திலேயே ஒரு குறிப்பிட்ட சதவீத வரி (WHT) கழிக்கப்படும். இவர்களில் பெரும்பாலானோர் முறையான மாதாந்தச் சம்பளம் இல்லாதவர்கள் என்பதால், ஒவ்வொரு கொடுப்பனவிலும் வரி கழிக்கப்படுவது அவர்களின் உடனடிப் பணப்புழக்கத்தை (Cash Flow) பாதிக்கும்.

இலங்கையில் மூத்த குடிமக்கள் தங்களது வாழ்நாள் சேமிப்புகளை வங்கிகளில் நிலையான வைப்புகளில் (Fixed Deposits) இட்டு, அதில் வரும் வட்டி வருமானத்தைக் கொண்டே வாழ்கின்றனர்.

புதிய வரி நடைமுறைகளின் கீழ், மூத்த குடிமக்கள் தங்களது வட்டி வருமானம் மற்றும் ஏனைய வருமானங்களை சுய அறிவிப்புச் செய்து, அதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். இணையவழி (Online) வரித் தாக்கல் முறைகள் மற்றும் சிக்கலான படிவங்கள் காரணமாக, முதியவர்கள் தொழில்நுட்ப ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.

உற்பத்தித் துறை (Manufacturing & Distribution): மூலப்பொருட்களைப் பெற்று விநியோகம் செய்யும் வர்த்தகர்களுக்கு 50 வீத வரம்பில் வரித்தாக்கம் ஏற்படும் போது, அது இறுதிப் பொருளின் விலையை உயர்த்தி, நுகர்வோரைச் சென்றடையும். 100 வீத வரம்பில் பாதிக்கப்படும் சேவை வழங்குநர்கள் (உதாரணமாக: மென்பொருள் நிறுவனங்கள், ஆலோசனை நிறுவனங்கள்), தங்களின் நட்டத்தைத் தவிர்க்க சேவைக்கான கட்டணங்களை முழுமையாக உயர்த்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவர்.

புதிய வரி மாற்றங்களால் நடுத்தர வர்க்கத்தினரும் மூத்த குடிமக்களும் எதிர்கொள்ளும் மறைமுகப் பொருளாதார நெருக்கடிகள்: நிபுணர்கள் எச்சரிக்கை! இலங்கையில் எதிர்வரும் காலங்களில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய வரி சீர்திருத்தங்கள் மற்றும் நிதிச் சேவைகள் மீதான வரிகள், நாட்டின் அடித்தட்டு மக்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை ஒட்டுமொத்த நுகர்வோரையும் பாரியளவில் பாதிக்கவுள்ளதாக வரி மற்றும் முகாமைத்துவ ஆலோசகர்கள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட வரி ஆலோசகர் ஏ.ஜி.எஸ். சுவாமிநாதன் சர்மா, நிதிச் சேவைகளுக்கான விலைப்பட்டியல்களில் இந்த வரிகள் நேரடியாகச் சேர்க்கப்படுவதால், சாதாரண வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோர் இதன் நேரடிப் பாதிப்பை உணர்வார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

விசேடமாக, உற்பத்தித் துறையில் உள்ள விநியோகஸ்தர்களுக்கு 50 வீத வரம்பிலும், சேவைத் துறையில் இருப்பவர்களுக்கு 100 வீத வரம்பிலும் இந்த வரி விதிப்புகள் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக உள்நாட்டு உற்பத்தி மற்றும் சேவைச் செலவுகள் அதிகரித்து, சந்தையில் பொருட்களின் விலைகள் மேலும் உயர வாய்ப்புள்ளது.

மேலும், புதிய வரி மாற்றங்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள 'நிறுத்திவைத்தல் வரி' (Withholding Tax) காரணமாக ஆலோசகர்கள், நடன ஆசிரியர்கள், கலைஞர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போன்ற சுயதொழில் செய்பவர்களின் மாதாந்த வருமானத்தில் பெரும் பகுதி பாதிக்கப்படும். 

அத்துடன், வட்டி வருமானத்தை நம்பியிருக்கும் மூத்த குடிமக்கள், புதிய வரி வரவு நடைமுறைகளின் கீழ் 'சுய அறிவிப்பு' செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள்ளாவதால், அவர்கள் நிர்வாக ரீதியான சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேரிடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஒட்டுமொத்த வரி நடைமுறைகளும் சாதாரண நடுத்தர வருமானம் ஈட்டுபவர்களின் மாதாந்தப் பொருளாதாரத் திறனைக் கட்டுப்படுத்தி, நாட்டின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்திலும் ஒரு மறைமுகப் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4