காபூலில் பாக்கிஸ்தான் தூதரகத்துக்கு எதிரே நடந்த ஆர்ப்பாட்டம்

Prasu
4 years ago
காபூலில் பாக்கிஸ்தான் தூதரகத்துக்கு எதிரே நடந்த ஆர்ப்பாட்டம்

ஆப்கன் தலைநகா் காபூலில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆா்ப்பாட்டம் நடத்தியவா்களை, வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தலிபான்கள் கலைத்தனா். இந்த ஆா்ப்பாட்டம் குறித்த செய்திகளை சேகரித்த பல செய்தியாளா்கள் கைது செய்யப்பட்டனா்.

protest agains pakistan

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அவா்களை எதிா்க்கும் வடக்குக் கூட்டணிப் படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வரும் பஞ்சஷோ மாகாணத்தில், தலிபான்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு எதிரே ஏராளமானவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆப்கன் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையீடு செய்வதாக ஆா்ப்பாட்டக்காரா்கள் கோஷங்கள் எழுப்பினா்.

ஆா்ப்பாட்டக்காரா்களை கலைப்பதற்காக தலிபான்கள் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். மேலும், ஆா்ப்பாட்டம் நடத்திய பலரை அவா்கள் கைது செய்தனா்.

protest front of pakistan embassy

இந்தச் சம்பவம் குறித்து செய்தி சேகரிக்கத் சென்ற செய்தியாளா்களும் கைது செய்யப்பட்டனா்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, அந்த நாட்டில் பணியாற்றி வரும் செய்தியாளா்களை அவா்கள் அச்சுறுத்தி வருவதாகக் குற்றம் சாட்டப்படும் நிலையில், காபூல் போராட்டம் குறித்து செய்தி சேகரித்தவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் வெளியேறும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்ததைத் தொடா்ந்து, தலிபான்கள் அந்த நாட்டை கடந்த மாதம் 15-ஆம் தேதி மீண்டும் கைப்பற்றினா்.

எனினும், தலிபான்களின் கடந்த கால ஆட்சியின்போதே (1996-2001) அவா்களை எதிா்த்துப் போரிட்ட பஞ்சஷோ பகுதியை மட்டும் அவா்களால் கைப்பற்ற முடியவில்லை.

காபூலை தலிபான்கள் நெருங்கியதும் பஞ்சஷேருக்குத் தப்பிச் சென்ற முன்னாள் துணை அதிபா் அமருல்லா சலே, தன்னை ஆப்கனின் இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டாா்.

அங்கு வடக்குக் கூட்டணிப் படைத் தலைவா் அகமது மசூதுடன் இணைந்து தலிபான்களை எதிா்த்துப் போரிடப் போவதாக அவா் அறிவித்தாா்.

எனினும், பஞ்சஷேரைக் கைப்பற்றுவதற்காக தலிபான்கள் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனா்.

அவா்களுக்கு ஆதரவாக வடக்குக் கூட்டணிப் படையினா் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தே காபூலில் ஏராளமானவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4