இன்றைய வேத வசனம் (8.9.2021)

#Bible #Prayer #spiritual
Prathees
4 years ago
இன்றைய வேத வசனம் (8.9.2021)

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

பிரதானிகளும் தேசாதிபதிகள் தானியேலைக் அவனுடைய பதவியிலிருந்து விழத்தள்ள வேண்டும் என்று சொல்லி ராஜ்ஜியத்தின் விசாரிப்பிலே குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள்

ஆனால் அவர்களால் ஒரு குற்றத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை

எனவே அவனை கர்த்தரைத் தேடுகிற விஷயத்தில் குற்றப்படுத்தும்படி தீர்மானித்தார்கள்

ஆகவே ராஜாவை சந்தித்து ராஜாவே நீர் வாழ்க! ராஜாவாகிய உண்மை தவிர வேறு எந்த தேவனையும் மக்கள் வணங்க கூடாதென்று சட்டம் பிறக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

அவர்களுடைய வஞ்சகத்தை அறியாத ராஜாவும் சட்டம் பிறப்பித்தார் அதை அறிந்தும் தானியேல் எப்போதும் போல தன் தேவனாகிய கர்த்தரை தேடினான் அதன் நிமித்தம் அவனை சிங்ககெபியிலே போட்டார்கள்

பிரதானிகளும் தேசாதிபதிகள் தானியேலை குற்றம்சாட்டின விஷயமே தேவன் அவன் மேல் பிரியமாய் இருந்ததற்கு காரணமாய் இருந்தது

ஆகையால் கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பி சிங்கங்களின் வாய்களை கட்டிப்போட்டார்

தானியேல் சிங்கத்தின் வாயிக்குத் தப்புவிக்கப்பட்டான் பசியோடு இருந்த சிங்கத்தின் கெபிக்குள் சென்ற தானியேல் உயிரோடு வெளியே வந்தான்

அவனுக்கு விரோதமாய் இருந்தவர்களோ சிங்ககெபிக்குள்ளே தூக்கி எறியப்பட்டு மாண்டுபோனார்கள் (தானியேல் 6-ம் அதிகாரம்)

ஆம் நண்பர்களே கர்த்தரைத் தேடின ஒருவரும் ஒரு நாளும் எந்த சூழ்நிலையிலும் மாண்டுபோவதில்லை.அவருடைய வல்லமையால் பாதுகாக்கப்படுவார்கள் அவருடைய கிருபையினாலே என்றென்றைக்கும் பிழைத்திருப்பார்கள். ஆமேன்!

வசனம்

ஆமோஸ் 5:6

கர்த்தரைத் தேடுங்கள்இ அப்பொழுது பிழைப்பீர்கள்;

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4