பெண் பார்க்கும்போது இவையெல்லாம் பெண்களின் தவறா? சமூகத்தின் தவறா? சொல்லடி அபிராமி.

Reha
2 years ago
பெண் பார்க்கும்போது இவையெல்லாம் பெண்களின் தவறா? சமூகத்தின் தவறா? சொல்லடி அபிராமி.
  • அவன் உயரம் ஒரு சென்டிமீட்டர் கம்மியா இருக்கு- வேண்டாம்!
  • போலீஸ் மாப்பிள்ளை – வேண்டாம்!
  • வக்கீல் மாப்பிள்ளை – வேண்டாம்!
  • சொந்த பிசினெஸ்ஸா ? ஏகப்பட்ட கடன் இருக்கலாம் – அதனால் வேண்டாம்!
  • எட்டாம் தேதியில் பிறந்திருக்கார் – அதனால் வேண்டாம்!
  • தலைப் பையனுக்கும் தலைப் பெண்ணிற்கும் ஆகாது- வேண்டாம்!
  • விசாகம் நட்சத்திரம் மூத்த மைத்துனருக்கு ஆகாது – வேண்டாம்!
  • மூலம் கண்டிப்பாய் ஆகாது- வேண்டாம்!
  • பையன் ரொம்ப கட்டையா இருக்கான் – வேண்டாம்!
  • காக்கா கருப்பு பரவாயில்லை , அதை விடக் கருப்பா இருக்கார்- வேண்டாம்!
  • மாப்பிள்ளை சிவப்பு தான் , ஆனால் லட்சணம் இல்லை- வேண்டாம்!
  • ஜாதகம் சரியில்லை , அதனால் வேண்டாம்!
  • சுக்கிரன் ராகு சேர்ந்து இருக்கு – அதனால் வேண்டாம்!
  • ராகு கேது தோஷம் இருக்கு – வேண்டாம்!
  • கால சர்ப்ப தோஷம் கடுமையாய் இருக்கு – வேண்டாம்!
  • குண்டு உடம்பாய் இருக்கு – அதனால் வேண்டாம்!
  • வயசு வித்தியாசம் ரொம்ப சாஸ்தியா இருக்கு – வேண்டாம்!
  • ஒரே பையன் தான் , அம்மா செல்லம் போல – அதனால் வேண்டாம்!
  • ரொம்பப் பெரிய இடமா இருக்கு – அதனால் வேண்டாம்!
  • குடியிருக்க வீடு கூட இல்லை – அதனால் வேண்டாம்!
  • பையன் வாங்கிற சம்பளம் வாடகைக்கே பத்தாது – அதனால் வேண்டாம்!
  • குடும்பப் பின்னணி சரியில்லை – அதனால் வேண்டாம்!
  • நாங்க சைவம் – நீங்க அசைவம் – அதனால் இப்போது ஐடியா இல்லை!
  • நம்மள விட ஜாதி அந்தஸ்தில் கொஞ்சம் கம்மி – வேண்டாம்!
  • படிப்பு பத்தாது – அதனால் வேண்டாம்!
  • ஒல்லிக் குச்சியா இருக்கார் – ஆகாது!
  • இந்தப் பையனை ஏற்கனவே பாத்திட்டோம் – வேண்டாம்!
  • ஒரு பொண்ணு அவங்க வீட்டில திரும்பி வந்துடுச்சு – அதனால் வேண்டாம்!
  • சும்மா தான் பதிவு பண்ணி வச்சோம்- அவசரம்னா வேற இடம் பார்த்துக்குங்க!
  • கப்பலில் வேலை ? எப்ப வீட்டுக்கு வருவான்னு தெரியாது – வேண்டாம்!
  • மாப்பிள்ளையோட அப்பா சுத்த தண்ணீர் வண்டி போல  வேண்டாம்!
  • ஒரு சில பொண்ணு வீட்டுக் காரங்க தங்களைப் பற்றிய விவரம் கொடுக்கும் போது , நிபந்தனைகள் மற்றும் சில விதிகள் கூறி  ஜாதகம் கொடுப்பார்கள்.
  • லக்கினத்தில் சனி செவ்வாய் சேரக் கூடாது ., இரண்டில் சனி, ஐந்தில் சனி , ஏழில் சனி , சனி – செவ்வாய் சேரக் கூடாது ., சூரியன் -செவ்வாய் எந்தக் கட்டத்திலும் சேரக் கூடாது.  இரண்டு-எட்டில் ராகு கேது இருக்கக் கூடாது!
  • தமிழ் நாட்டு எல்லை தாண்டித் தர மாட்டோம் -வேற இடம் பார்த்துக்கோங்கோ!
  • ஜாதகத்தை மாற்றிக் கொடுத்திட்டாங்க – ஆரம்பமே இப்படியா ?
  • ரொம்ப காலமாய் ஜாதகம் மார்க்கெட்டில் சுத்துது – வேண்டாம்!
  • படிப்பிலே பொய் சொல்லிட்டாங்க – வேண்டாம்!
  • மாப்பிள்ளை வீட்டார் வருமானம் இன்றி இருக்கும் போது பெண்ணின்
  • வருமானத்தில் காலம் ஓட்டினால்  கண்டிப்பாய் பெண் தர மாட்டோம்!
  • பத்து ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி வாங்கிட்டுத் கொடுப்போம்- சம்மதமா?
  • மாப்பிள்ளை கொஞ்சமாகத் தான் குடிப்பானாம் – அதனால் வேண்டாம்!
  • பழைய காதலி இன்னும் தொடர்பில்  தான் இருக்கிறாள் – அதனால் வேண்டாம்!
  • ஜாதகத்தில் எதிர்காலம் கேள்விக் குறியாக இருக்கு – அதனால் வேண்டாம்!
  • பெண்ணின் படிப்புக்கு மாப்பிள்ளை படிப்பு  கம்மியாக இருக்கு – வேண்டாம்!
  • பெண் வீட்டில் நல்ல வசதி -பையன் வீட்டில் கம்மி- வேண்டவே வேண்டாம்!
  • தை மாசம் தலைக் கல்யாணம் செய்ய மாட்டோம்!
  • பிறந்த மாசத்தில் கல்யாணம் ஆகாது – வேண்டாம்!
  • அக்கினி நட்சத்திரம் கல்யாணம் ஆகவே ஆகாது!
  • கார்த்திகை தீபம் வந்துருச்சு -அப்புறம் பாத்துக்கலாம் – அதனால் வேண்டாம்!
  • இதை எல்லாம் தாண்டி வருபவர்களுக்கு சிவப்புக் கம்பளம் வரவேற்பு உண்டு!
  • அரசு உத்தியோகம்  மற்றும் வங்கி வேலையைத் தவிர மற்றவர்கள் அணுக வேண்டாம்!
  • வாடகை நிறைய வருதுன்னு சொல்லிட்டு வண்டி ஒட்டுகிறவர்கள் வரவே வேண்டாம்!
  • விவசாயத்தை நம்பி பெண் கொடுக்கிற மாதிரி ஐடியா இல்லை!
  • கோவிலில் பூ கேட்டுப்  பார்த்தோம் , சாமியே சம்மதிக்க வில்லை என்று மொத்தத்தையும் ரிட்டன் செய்து விடுவார்கள்!
  • இன்னும் விட்டுப் போன விஷயங்கள் நிறைய உண்டு – அதை நீங்கள் அனுபவித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!
  • எங்க ஜாதி தவிர வேற ஜாதிக்கு  இட ஒதுக்கீடு இல்லை  ( இங்கேயும் வந்துட்டிங்களா ?)
  • ரொம்ப தூரமா இருக்கு ? நாங்க இங்க பக்கத்தில தான் பார்க்கிறோம்
  • இந்த பொண்ணு வீட்டுக் காரங்கிட்ட பேசிப் பேசியே ., அப்படி என்ன கேட்டுப் போய்ட்டாங்க!  இந்தப் பையனின் கல்யாணம் முடிந்தவுடன் பாகப் பிரிவினை பண்ணி சொத்தை மாத்திக் கொடுத்திருவீங்களா ?
  • பத்தாயிரம் சம்பளத்துக்கெல்லாம் பொண்ணு கிடைக்காது ., சும்மா சு…