பிரான்ஸில் 120000 பேருக்கு இதுவரை 3ம் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது.

#world_news
பிரான்ஸில் 120000 பேருக்கு இதுவரை 3ம் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது.

பிரான்ஸில் மூன்றாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுவரும் நிலையில் வளர்முக மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இன்னும் முதலாவது டோஸை கூட பெறமுடியாமல் உள்ளது.

இதேவேளை பிரான்ஸில் கொரோனா வைரசுக்கான மூன்றாவது தடுப்பூசி 120.000 பேருக்கு இதுவரை போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

செப்டம்பர் 1 ஆம் திகதியில் இருந்து 6 ஆம் திகதி வரை 120.000 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக நேற்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாத்திரம் 30.000 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

விரைவாக நோய்த்தொற்றுக்கு உள்ளாகக்கூடிய, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்களுக்கே இந்த மூன்றாவது தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. பிரான்சில் 18 மில்லியன் பேர் இந்த மூன்றாவது தடுப்பூசியை பெற தகுதியுடையவர்களாக இருக்கின்றனர்.

இவர்களில் 12.4 மில்லியன் பேருக்கான மூன்றாவது தடுப்பூசி இவ்வருட இறுதிக்கும் போடப்பட்டு விடும் எனவும் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதேவேளை, 157.000 தடுப்பூசிகள் ‘ஓய்வு நிலையங்களுக்கு’ ஒதுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11 ஆம் திகதி அவர்களுக்கான தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4