அமெரிக்க முதல்பெண்மணி ஜில் பைடன் பேராசிரியர் பதிவியை தொடருகிறார்.

#world_news
அமெரிக்க முதல்பெண்மணி ஜில் பைடன் பேராசிரியர் பதிவியை தொடருகிறார்.

அமெரிக்க அதிபராக ஜன.,20ல் ஜோ பைடன் பதவியேற்று அவரது ஆட்சி தொடருகையில், இவரது மனைவி ஜில் பைடன், வடக்கு வெர்ஜீனியா கம்யூனிட்டி கல்லுாரியில் பேராசிரியையாக 2009 முதல் பணியாற்றி வருகிறார்.கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் பள்ளி, கல்லுாரி வகுப்புகள் 'ஆன்லைன்' வழியாகவே நடத்தப்பட்டு வருகின்றன.

ஜில் பைடனும் ஆன்லைன் வழியாகவே பாடங்களை நடத்தி வந்தார். கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து அமெரிக்காவில் கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன.இதையடுத்து, வடக்கு வெர்ஜீனியா கல்லுாரிக்கு நேற்று சென்று மாணவ - மாணவியருக்கு ஜில் பைடன் பாடம் சொல்லிக் கொடுத்தார். அமெரிக்க அதிபராக இதற்கு முன் இருந்தவர்களின் மனைவியர் யாரும், வேறு எங்கும் வேலைக்கு சென்றதில்லை.

அமெரிக்க அதிபராக இருந்த புஷ்ஷின் மனைவி லாரா, கணவர் அதிபர் ஆனதும் துவக்கப் பள்ளி ஆசிரியர் பணியை ராஜினாமா செய்துவிட்டார். அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளின்டனின் மனைவி ஹிலாரி, ஒபாமாவின் மனைவி மிச்செல் ஆகியோர் சமூக சேவைகளில் ஆர்வம் காட்டினர். பேராசிரியையாக பணிக்கு செல்வது பற்றி ஜில் பைடன் கூறுகையில், ''நான் விரும்பி ஏற்றுக் கொண்ட பேராசிரியர் பணிக்கு இணையாக எனக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை.

மாணவ - மாணவியரை மீண்டும் சந்திப்பதற்காக நீண்ட நாட்களுக்கு காத்திருக்க முடியாது,'' என்றார். ஜில் பைடன் இளநிலை, முதுநிலை உட்பட நான்கு பட்டங்களும், டெலாவேர் பல்கலையில் கல்வித் துறையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4