நாசாவினால் அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் செவ்வாயின் பாறையொன்றை குடைந்துள்ளது!

#world_news
நாசாவினால் அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் செவ்வாயின் பாறையொன்றை குடைந்துள்ளது!

அமெரிக்காவின் நாசாவினால் அனுட்ட பெர்சவரன்ஸ் விண்கலம் செவ்வாயை வெற்றிகரமாக அடைந்து அங்கு ஆராய்ச்சிகளை நடத்தி தகவல்களை புவிக்கு அனுப்பி வைத்தவண்ணம் உள்ளது.

இந்த பெர்சவரன்ஸ் ரோவர், முதல் முறையாக அங்கிருந்த ஒரு பாறையை குடைந்து வெற்றிகரமாக மாதிரிகளை சேகரித்துள்ளது. இதனை வரலாற்று சிறப்புமிக்க தருணம் என குறிப்பிடுகின்றனர்.

சூரியனிலிருந்து பூமிக்கு அடுத்த கிரகமாக செவ்வாய் உள்ளது. சுமார் 3,500 கோடி ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் கிரகமும் பூமி போன்ற சூழலை கொண்டிருந்ததாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால் தற்போது அதன் வளிமண்டலம் மெல்லியதாகவும், கரியமில வாயுக்களாலும் சூழலப்பட்டுள்ளது.

பூமியை போன்ற வேகத்திலேயே அதுவும் தனது அச்சில் சுழல்கிறது. ஆனால் பூமியை விட பல கோடி கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருப்பதால் இது சூரியனை சுற்றி வர 687 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. புவி ஈர்ப்பு விசையுடன் ஒப்பிடும் போது செவ்வாயில் ஈர்ப்பு விசை 38% மட்டுமே. பூமியை விட அளவில் சிறியது. இருப்பினும் அதன் நிலப்பரப்பு பூமியின் கண்டங்களின் பரப்பளவுக்கு சமமாக உள்ளது.

பல நூறு கோடிகளுக்கு முன்பு பூமியை ஒத்த சூழலை கொண்டிருந்து பின்னர் வாழ லாயக்கற்ற நச்சுக்கிரகமாக மாறியதாக விஞ்ஞானிகள் கருதுவதால் அதனை ஆராய 1960-களிலிருந்து தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் செவ்வாய் 2020 திட்டத்தின் கீழ் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. பிப்., 2021-ல் அது வெற்றிகரமாக தரையிறங்கி பல தகவல்களை சேகரித்து அனுப்பி வருகிறது. முக்கிய கட்டமாக அங்குள்ள பாறையிலிருந்து மாதிரிகளை சேகரிக்கும் பணிகளை ஆகஸ்ட் முதல்வாரம் தொடங்கியது. அது தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம்(செப்., 06) பெர்சவரன்ஸில் உள்ள 7 அடி நீள ரோபாடிக் கை ஒரு சூட்கேஸ் அளவிலான பாறையை குடைந்து வெற்றிகரமாக மாதிரிகளை எடுத்துள்ளது. நாசாவிற்கு அதன் தெளிவற்ற புகைப்படங்கள் தான் தற்போதைக்கு கிடைத்துள்ளன. இருப்பினும் முதல் மாதிரி பெர்சவரன்ஸால் சேகரிக்கப்பட்டதை நாசா உறுதி செய்துள்ளது. அம்மாதிரிகள் பாதுகாப்பான குப்பிகளுக்குள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனை செவ்வாய் கிரக ஆய்வில் ஒரு மைல்கல் என்று நாசா கூறியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4