யாழ்ப்பாணத்தில் ஊரடங்கில் திருமணம் செய்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

#Jaffna #wedding #Police #Lockdown
Yuga
4 years ago
யாழ்ப்பாணத்தில் ஊரடங்கில் திருமணம் செய்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அச்சுவேலி வடக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டதாக பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அச்சுவேலி வடக்கில் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

அதனையடுத்து, நிகழ்வு இடம்பெற்ற வீட்டுக்குச் சென்ற பொலிஸார், திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த விருந்தினர்களை அங்கிருந்து செல்ல பணித்தனர்.

அத்தோடு, மணமக்கள் உள்ளிட்ட சிலரிடம் கொரோனா தொற்று பரிசோதனையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் அவர்கள் இருவருக்கும் நெருக்கமான உறவினர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனையை முன்னெடுக்க சுகாதார மருத்துவ அதிகாரியிடம் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், சுகாதார கட்டுப்பாடுகளை மீறி திருமண வைபவத்தை ஒழுங்கு செய்தவர்கள் மீது மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்களை எதிர்வரும் 15ஆம் திகதி நீதிமன்றில் முற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என அச்சுவேலி பொலிஸார் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4