பிரித்தானியாவில் நேற்று மட்டும் 209 கொவிட் மரணங்கள்!

#world_news #Covid Variant
பிரித்தானியாவில் நேற்று மட்டும் 209 கொவிட் மரணங்கள்!

பிரித்தானியாவில் திடீரென கொரோன தொற்று அதிகரிப்பால் மரணங்கள் நேற்று அதிகளவில் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 37489 பாதிக்கப்பட்டதோடு 209 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 7 056106பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஒரு இலட்சத்து 33 483பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 1 255 115பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 1062பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 5 667 508பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4