தரவுகள் அழிப்பு: தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கைது

#Arrest #SriLanka
Prathees
4 years ago
 தரவுகள் அழிப்பு: தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கைது

தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தரவுகள் சமீபத்தில்  அழிக்கப்பட்டமை தொடர்பில் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.

தரவுத்தளத்தை இயக்கிய  எபிக் லங்கா டெக்னோலஜீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Government Cloud எனப்படுகின்ற இலங்கை அரசாங்கத்தின் தரவுத்தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்த தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் தன்னியக்க தரவுக்கட்டமைப்பு கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதி அழிவடைந்தது.

இரகசியத்தன்மை பேணப்பட வேண்டிய இந்த தரவுகள் அழிவடைந்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது. 

இந்த நிலையில், தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் ஆணையத்தின் மென்பொருள் அமைப்பின் பொறுப்பான நிறுவனம் முன்பு தரவுத்தளத்தில் உள்ள பல தரவு கோப்புகள் பொறியாளரால் தவறுதலாக நீக்கப்பட்டுள்ளதாகவும் கணினியில் நுழைய அனுமதித்தவுடன் தரவை மீட்டெடுக்க முடியும் என்றும் கூறியிருந்தது.

இதனையடுத்தே  தரவுத்தளத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியை புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4