அழு மூஞ்சிப் பேய்...
பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகப் கருதப்படுகின்ற ஜப்பானிய சாமுராய் அயோமா.
ஆள் கொஞ்சம் சபலிஸ்ட்.. தன் வீட்டில் வேலை பார்த்த அழகு வேலைக்காரி ஒகிகு மேல் அவருக்கு ஆசை. ஜாடைமாடையாகச் சொல்லி பார்த்தார். அவள் கண்டு கொள்ளவில்லை. நேரடியாகவும் கேட்டு பார்த்தார். பயந்து மறுத்தாள்.
எனக்கு இணங்கினால் நீ என் ஆசை நாயகியாக காலமெல்லாம் சுகமாக வாழலாம் டார்லிங் என்று ஆசை காட்டியும் பார்த்தார். ஒகிகு மசியவில்லை.
ஒகிகு வீட்டில் இல்லாத சமயத்தில் சமையலறைக்குள் சென்றார் அயோமா. அங்கே விலையுயர்ந்த டச்சு தட்டுகள் பத்து இருந்தன. அவற்றை எடுத்து கொண்டு சென்று கிணற்றில் போட்டு விட்டார். ஒகிகு இரவில் அயோமாவுக்கு உணவு பரிமாறினாள்.
டச்சு தட்டு எங்கே அதில் உணவைக் கொண்டு வா என்றார். சமையலறைக்கு சென்ற ஒகிகு அதிர்ந்து நின்றால் படபடப்புடன் தட்டுகளைத் தேடினாள். கண்ணிருடன் அயோமா முன்வந்து நின்றாள். என் விருப்பத்துக்கு சம்மதம் சொன்னால் உன்னை மன்னிக்கிறேன் என்று ஒகிகுவே மிரட்ட ஆரம்பித்தார்.
அவள் உறுதியாக நின்றால். அயோமா அவளைக் கட்டி வைத்து துன்புறுத்திக் கொன்றார். அதே கிணற்றில் அவளது உடலையும் தூக்கி போட்டார்.
சில நாள்கள் கடந்திருக்கும். இரவில் அந்த கிணற்றில் இருந்து அகோரமான ஓசைகள் கேட்க ஆரம்பித்தன. ஒன்று இரண்டு மூன்று என்று தட்டுகளை எண்ணும் ஒகிகுவின் குரல் அயோமாவின் காதுகளில் விழந்தன.
ஒன்பது வரை எண்ணிய அந்தக் குரல் அதன்பின் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தது. தினமும் நள்ளிரவில் ஒகிகுவின் இந்தக் குரலைக் கேட்டுக் கேட்டே பைத்தியமாகிப் போனார் அயோமா.
வேண்டுமானால் டோக்கிய நகரத்துக்கு செல்லுங்கள். அங்கே அயோமா டோரி என்ற பெயரில் ஒரு நெடுஞ்சாலை இருக்கிறது.
அதில் பயணம் செய்து கொண்டே போனால் அகாசகா என்ற பகுதியை அடையலாம். அங்கே தான் ஜப்பானுக்கான கனடாவின் தூதரகம் இருக்கிறது. அதனுள் சென்றால், அந்த இடத்துக்கு சம்பந்தமே இல்லாதவாறு ஒரு பழங்கிணறு இருக்கும்.
ஒகிகு வாழும் கிணறு தான். முடிந்தால் நள்ளிரவு வரை காத்திருங்கள் ஒகிகு அழுதுகொண்டே ஒன்று இரண்டு.... எண்ணுவதற்காக வெளியே வரலாம்...