யாழ்.உடுப்பிட்டியில் இரண்டு பகுதியினருக்கு இடையே மோதல்:இராணுவம் முற்றுகை

யாழ். உடுப்பிட்டியில் கிராமத்தில் இரண்டு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறியதையடுத்து பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உடுப்பிட்டி இலகடி மற்றும் வன்னிச்சி அம்மன் கோவில் வேலிந்ந தோட்டம் பகுதியைச் சேர்ந்த இருதரப்பினர் இடையே இடம்பெற்று வந்த மோதல் கடந்த சில நாட்களாக ஊர்ப் பிரச்சினையாக மாறியுள்ளது.
இதன்போது சம்பவிடத்திற்கு வருகை தந்த பொலிஸாரினால் சம்பவத்தினை கட்டுப்படுத்த முடியாமையினால் விசேட அதிரடிப்படையினரின் உதவியினால் நிலமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த மோதலில் சிலர் தலைமறைவாகிய நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய இன்றிரவு இராணுவத்தினர் சுற்றிவளைத்து பாதுகாப்பு வழங்கியுள்ளனர். அதனால் அந்தக் கிராமத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.



