பிரதமர் மற்றும் பாப்பரசர் சந்திப்பதாக வெளியாகும் செய்தி உண்மைக்குப்புறம்பானது
#Mahinda Rajapaksa
Prasu
3 years ago

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையை சந்திப்பதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம் பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்துதல் மற்றும் இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு பிரதமரின் இத்தாலி விஜயம் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



