நியூசிலாந்தில் இணையத் தாக்குதல்

#Newzealand
Keerthi
4 years ago
நியூசிலாந்தில் இணையத் தாக்குதல்

நியூசிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட இணையத்தாக்குதலில் முக்கிய நிதி நிறுவனங்களின் இணையத்தளங்கள் செய லிழந்ததால் ஏராளமான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

அந்தத் தாக்குதலில் தேசிய அஞ்சல் சேவைகளும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஊடுருவல்காரர்களுக்கு எதிராக போராடி வருகிறோம் என்று சேவைகளை வழக்க நிலைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் கூறினர்.

நாட்டின் முக்கிய நிறுவனங்களைக் குறிவைத்து விநியோகிக்கப்பட்ட சேவை மறுப்பான ‘டிடோஎஸ்’ தாக்குதல் நடத்தியதை அறிந்துள்ளதாக தேசிய கணினி அவசர பதில் நடவடிக்கை குழு தெரிவித்தது.

“நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு நிலைமையைச் சீர்செய்து வருகிறோம்,” என்று தனது இணையத்தளத்தில் வெளியிட்ட தகவலில் அக்குழு கூறியது.

இந்த தாக்குதலில் நியூசிலாந்தின் வங்கிச் சேவைகள், அஞ்சலக சேவைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.

இவற்றில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வங்கி குழுமத்தின்(ஏ என் இ சட்) நியூசிலாந்து இணையத் தளமும் நியூசிலாந்து அஞ்சலகத்தின் இணையத் தளமும் அடங்கும்.

சில வாடிக்கையாளர்களால் இணையவங்கிச்சேவைகளைப் பயன்படுத்த முடியவில்ைல என்று ஃபேஸ்புக் பதிவில் ஏ என் இ சட் தெரிவித்தது.

“இதனை சரிசெய்ய எங்களுடைய குழு பாடுபட்டு வருகிறது. இடையூறு ஏற்பட்டதற்கு மன்னிக்கவும்,” என்றும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது.

நியூசிலாந்து அஞ்சலகம், சேவையில் தற்காலிக இடையூறுகள் ஏற்பட்டதாக இணையத்தளம் வாயிலாகத் தெரிவித்தது.

நியூசிலாந்து அஞ்சலகத்துக்குச் சொந்தமான கிவிபேங்கிலும் சேவை பாதிக்கப்பட்டதாக சமூக ஊடகங் களில் சில வாடிக்கையாளர்கள் புகார் கூறியிருந்தனர். கடந்த ஜனவரியில் நடந்த இணையத் தாக்குதலில் மத்திய வங்கியின் முக்கிய தகவல்கள் கசிந்ததால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதே ஊடுருவல்காரர்கள் கடந்த மே மாதம் மருத்துவமனைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தினர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4