சுவிற்சலாந்தில் இனி குறைந்த பட்ச சம்பளம் 4000CHF ஆகவிருக்கிறது.

#world_news
சுவிற்சலாந்தில் இனி குறைந்த பட்ச சம்பளம் 4000CHF ஆகவிருக்கிறது.

சுவிற்சலாந்தானது கொவிட் நெருக்கடியிலிருந்து  மீண்டு பொருளாதாரம் வலுவடைந்து வருவதனால் அங்குள்ள ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க தொழிற்சங்க கூட்டமைப்பு  umbrella கோரிக்கை விடுத்துள்ளது.

இதனால் சுவிட்சர்லாந்தில் குறைந்தபட்ச ஊதியமாக 4,000 பிராங்குகள் என உறுதி செய்ய வேண்டும் எனவும் தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் முக்கிய தொழிற்சங்கமான umbrella குழுமம், குறைந்தபட்சம் 2% அல்லது மாதத்திற்கு 100 பிராங்கள் சம்பள உயர்வு பெற ஊழியர்களுக்கு உரிமை உண்டு என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் உற்பத்தி நிலை மற்றும் இலாபம் அதிகரித்த நிலையில் ஊதிய நிலைகள் மட்டும் தேக்கமடைந்துள்ளன என்றார் தொழிற்சங்க தலைமை பொருளாதார நிபுணர் டேனியல் லம்பார்ட்.

இதன்படி அமைப்பு குறைந்தபட்ச சம்பளம் 4000 சுவிஸ் பிராங்குகளாக இருத்தல் வேண்டும் என வலியுறுத்துகிறது
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4