பிரான்ஸின் இன்றைய கொவிட் நிலவரம்.

#world_news #Corona Virus
பிரான்ஸின் இன்றைய கொவிட் நிலவரம்.

பிரான்ஸில் கொவிட் நிலைவரங்களா கடந்த 24 மணிநேரத்தில் பின்வரும் வைத்தியசாலை அனுமதிகளும் மரணங்களும் நிகழ்ந்துள்ள

கடந்த 24 மணிநேரத்தில் 12, 828 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்தவார புதன்கிழமை 17,621 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது. இதுவரை மொத்தமாக 6,866,856 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

தற்போது மருத்துவமனையில் 10.438 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று செவ்வாய்க்கிழமையோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை சிறிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் 2.224 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய நாளோடு ஒப்பிடுகையில் 35 பேரால் இந்த எண்ணிக்கை குறைவாகும்.

அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 100 பேர் சாவடைந்துள்ளனர். மொத்த சாவு எண்ணிக்கை 115.230 பேராக அதிகரித்துள்ளனர். நேற்றைய நாளில் 120 பேர் சாவடைந்துள்ளனர்.

பிரெஞ்சு மக்களில் 73.2% வீதமானவர்கள் ( 49.370.949 பேர்) தங்களுக்கான முதலாவது தடுப்பூசியினை போட்டுக்கொண்டுள்ளனர். அதேவேளை 68.3% வீதமானவர்கள் (46.045.783 பேர்) தங்களது இரண்டாவது தடுப்பூசியினையும் போட்டுக்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4