கனடா பிராம்டனில் இளம் பெண் மீது துப்பாக்கி சூடு....

#world_news
கனடா பிராம்டனில் இளம் பெண் மீது துப்பாக்கி சூடு....

கனடாவில் இளம்பெண் ஒருவர், சுடப்பட்டு காயமடைந்து வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கனடாவில் உள்ள பிராம்டனில் இருக்கும் Ardglen Drive and Wilton Drive-ல் நேற்று முன்தினம் துப்பாக்கிசூடு தாக்குதல் நடந்துள்ளது. எனவே, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்பு, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்ற போது, அங்கு 19 வயதுடைய ஒரு இளம்பெண் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு பலத்த காயத்துடன் கிடந்துள்ளார்.

அவருக்கு, முதலுதவி அளிக்கப்பட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இப்போது அவருக்கு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்று காவல்துறையினர் கூறியுள்ளார்கள்.  காவல்துறையினர், இது தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் தங்களை அணுகுமாறு கூறியிருக்கிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4