பொலிஸாரிடம் சிக்கிய பொப் மார்லி

#SriLanka #Police
Yuga
4 years ago
பொலிஸாரிடம் சிக்கிய பொப் மார்லி

போதைப்பொருள் கடத்தலின் பிரதான சந்தேநபராக கருதப்பட்டு பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த “சமிந்த தாப்ரோவ்” எனப்படும் பொப் மார்லியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முன்னதாக குறித்த நபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியிருந்தனர்.

சமீபத்தில் பேருவளை கடற்கரையில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் 288 கிலோ 644 கிராம் போதைப்பொருளுடன் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இருப்பினும், இந்த போதைப்பொருளை நாட்டுக்கு கொண்டுவந்த பிரதான சந்தேக நபராக “பொப் மார்லி” அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4