புதிதாக அமைக்கப்பட்டுள்ள தலிபான் அரசுக்கு சீனா ரூ.228 கோடி நிதியுதவி

#Taliban
Keerthi
4 years ago
புதிதாக அமைக்கப்பட்டுள்ள தலிபான் அரசுக்கு சீனா ரூ.228 கோடி நிதியுதவி

 புதிதாக அமைக்கப்பட்டுள்ள தலிபான் அரசுக்கு 3.1 கோடி டாலா் (சுமாா் ரூ.228 கோடி) மதிப்பிலான உதவி அளிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது.

இதுகுறித்து சீன அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளதாவது:

ஆப்கன் அண்டை நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா் மாநாட்டில் பங்கேற்ற சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யீ, ஆப்கானிஸ்தானில் புதிதாக அமைந்துள்ள இடைக்கால அரசுக்கு 3.1 கோடி மதிப்பிலான உதவிகளை அளிக்கப்போவதாக உறுதியளித்தாா்.

போரால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டுக்கு குளிா் தடுப்புப் பொருள்கள், தடுப்பூசிகள், மருந்துகள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்குவதன் மூலம் இந்த உதவியை அளிக்கப் போவதாக அவா் கூறினாா்.
பாகிஸ்தான் ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில் ஈரான், தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்றன.

இந்த மாநாட்டில் புதிய தலிபான் அரசுக்கு தனது ஆதரவைத் தெரிவித்த வாங் யீ, ஆப்கனிஸ்தானில் நிலவி வந்த அரசியல் குழப்பத்துக்கு தலிபான்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகப் பாராட்டு தெரிவித்தாா் என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4